சாலையில் பட்டாக்கத்தியை தீட்டி தீப்பொறி பறக்க டிக் டாக் வீடியோ

டிக் டக் வீடியோ சமூகத்தை சீரழித்து வருகிறது என தகவல்கள் சில நாட்களாக பரவி வருகிறது. காவல் நிலையத்துக்கு திருவிழாவுக்கு அனுமதி கேட்க சென்றவர் வெளியே வரும்போது கெத்தாக ஜெயிலில் இருந்து வந்தது போல் டிக் டாக் எடுத்தது, மேலும் இளம்பெண்கள் பலர் தவறான பாடலுக்கு அங்க அசைவுகளை வெளிப்படுத்துவது, தவறான வார்த்தைகளை இளைஞர்கள் பேசுவது வரிசையில் லேட்டஸ்டாக இரண்டு இளைஞர்கள் தீப்பொறி பறக்க கத்தியை சாலையில் உரசி சென்று டிக் டாக் வெளியிட்டதால் கைது செய்யப்பட்டனர்.

டிக் டாக்கை தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் சட்டசபையில் கூறி இருந்தார்.

சென்னையை சேர்ந்த இளைஞர்கள் சரண்குமார், மணிகண்டன் என்ற இளைஞர்கள் இருவரும் சாலையில் தீப்பொறி பறக்க கத்தியை சாலையில் தீட்டியவாறே ஓட்டி சென்றனர்.

இதை கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் போலிசில் புகார் அளித்தனர் அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்