இதுக்கு இல்லையா சார் எண்டு- அரசுபேருந்தை நிறுத்தி டிக் டாக் செய்த வாலிபர்

டிக் டாக் செயலி வந்தாலும் வந்தது அனைவரும் ரொமான்ஸ் மூடிலும், சிவாஜி கமல் ரேஞ்சில் நடிப்பு வெறியுடன் திரிகின்றனர். புகழ்பெற்ற திரைப்பட டயலாக்குகளை டிக் டாக் செய்கிறேன், முக்கியமான இடங்களில் டிக் டாக் செய்து வெளியிடுகின்றனர். உதாரணமாக ஒரு திரைப்படத்தின் காட்சி ஒரு சூழலில அமைந்திருந்தால் குறிப்பாக போலீஸ் ஸ்டேஷன் காட்சி என்று வைத்துக்கொண்டால் அந்த போலீஸ் ஸ்டேஷனிலே சென்று அந்த காட்சியை டிக் டாக் செய்தால்தான் கெத்தாக இருக்கும் என்று நினைத்து அங்கேயே சென்று டிக் டாக் செய்து மாட்டிக்கொள்கின்றனர்.

c1fc50c2cfba61da433266811279583c

இதுபோல கெத்து காட்டுறேன் என கடலூர் அருகே கீழ் ஆதானூர் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அரசு பேருந்தை நிறுத்தி டிக் டாக் செய்தது வைரலாகி வருகிறது.

திட்டக்குடியில் இருந்து மங்களூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று கீழ் ஆதனூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட தயாரான நிலையில் குறுக்கே வந்த அஜித்குமார் பேருந்து முன் சென்று, தனது பைக்கை நிறுத்தி, அதன் மீது படுத்தவாறு சினிமா பாடலுக்கேற்ற வகையில் உடல் அசைவு செய்து, டிக்-டாக் செயலி மூலம் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இவரது செயல் சமூக வலைதளங்களில் வைர லாக பரவியது.

இதைத் தொடர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் அளித்தப் புகாரில் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையூறு ஏற்படுத்திய வகையில் இவர் கைது செய்யப்பட்டார்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.