டிக் டாக் செயலி தடை சரியல்ல-சீமான்

மனித நேய மக்கள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி நேற்று சட்டசபையில் டிக் டாக் செயலி குறித்து கேள்வி எழுப்பினார். அதாவது ஆபாசத்தையும் வன்முறையையும் பரப்பும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா என்ற கேள்விக்கு, பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் ஏற்கனவே ப்ளூவேல் விளையாட்டின் சர்வர் எங்கிருக்கிறது என கேட்டு அதை கண்டறிந்து தடை செய்தோம்.

அதை போல தற்போது இதையும் தடை செய்ய முயற்சி செய்வோம் அதற்காக மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.

இந்நிலையில் இந்த தடை விதிக்கபோகும் நிகழ்வு பற்றி நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானிடம் கேட்டபோது. அதை எதற்கு தடை பண்ணனும் ஆபாசம், வன்முறை இருந்தா அதை மட்டும் தடை பண்ணலாமே. ஒட்டுமொத்த செயலியையும் ஏன் தடை செய்ய வேண்டும். ஒருத்தன் மின்சாரம் தாக்கி காயமடைந்தால் அதற்காக மின்சாரத்தையே தடை பண்ண முடியுமா என கூறி இருக்கிறார்.