Connect with us

துணிவுடன் வாழ சொல்லவேண்டியது சூரிய பகவான் மூல மந்திரத்தை…

ஆன்மீகம்

துணிவுடன் வாழ சொல்லவேண்டியது சூரிய பகவான் மூல மந்திரத்தை…

ராமாயண போர் உச்சக்கட்டத்தில் நடந்த நேரம்… என்ன செய்தும் ராவணனை வீழ்த்த முடியவில்லை. ராமருக்கு மனச்சோர்வு உண்டானது. இன்னும் இவன் பணியவில்லையே? என்ன தான் வழி?” எனக் கவலைப்பட்டார். அப்போது வந்த அகத்திய முனிவர், சூரியபகவானைப் பிரார்த்தனை செய்யும் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ ஸ்லோகத்தை ராமருக்கு உபதேசம் செய்தார். ராமரும் அதைச் சொல்லி சூரியபகவானை வழிபட்டார். ராமரின் சோர்வு காணாமல் போனது. வீரம் பொங்கியது. மறுநாள் உற்சாகமுடன் போரிட்டு ராவணனை வதம் செய்ததாக வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் சொல்லப்படுகிறது. துணிவுடன் வாழ விரும்புபவர்கள் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட்டால் போதும். தைரியம் பிறக்கும். வாழ்க்கைப் போரிலும் எளிதாக வெல்ல முடியும்”.

ஆதித்ய ஹிருதயத்தை படிக்க முடியாதவர்கள், சென்னை, வியாசர்பாடியில் இருக்கும் ரவீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கினால் நற்பலனை பெறமுடியும். அல்லது, கீழ்க்காணும் சூரிய பகவான் மூல மந்திரத்தினை சொன்னாலும் நற்பலனை பெறலாம்.

சூரிய பகவான் மூல மந்திரம்..

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

பாஸ அஸ்தாய தீமஹி தன்னோ சூர்ய ப்ரசோதயாத் –

பொருள்: குதிரை கொடியை உடையவரும், தன் பாச கரங்களால் உலக மக்களை ரட்சிப்பவருமான சூரிய பகவானே! உங்களை வணங்குகிறேன். எனக்கு நல்லாசி தந்து அருள்புரிய உங்கள் பாதம் பணிகிறேன்.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக மனம் புத்துணர்ச்சி கொள்ளும், சோர்வு காணாமல் போகும். அரசியலில் வெற்றி, அரசாங்க வேலை மற்றும் உயர்பதவி/தலைமை பதவி கிட்டும்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top