இழவு வீட்டில் பறையடிப்பது ஏன்?!


24572af0870f6da6a4444d338a5ee9c4-2

ஒருவர் இறந்துட்டால் வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், குறைஞ்சது பறை ஓசை மட்டுமாவது இருக்கும். ஏழை, பணக்காரன்னு வித்தியாசமில்லாம பறைன்னு சொல்லப்படும் தப்பு அங்க ஒலிக்கும். எதுக்கு இப்படி சாவு விழுந்த வீட்டில் மேளம் ஒலிக்க விடுறாங்கன்னு தெரியுமா?!

சாவு வீட்டை அடையாளப்படுத்திக்காட்ட இப்படி மேளம் அடிக்கப்படுது. இதுமட்டுமில்லாம இன்னொரு காரணமும் இருக்கு. பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக்கொண்டு ஒரு வித வைப்ரேஷனைக் கொடுக்குமாம். பறை சத்தத்தை கேட்டும் ஆடாமல் அசையாமல்எழுந்திருக்காமல் கிடந்தார்ன்னா அவர் உண்மையிலேயே இறந்துட்டார்ன்னு உறுதி படுத்திக்குவாங்களாம்.

இப்ப வெறும் சத்தத்தைதான் இந்த பறை அடிக்குறவங்க உண்டாக்குறாங்க. முன்னலாம் ஒரு தாளத்திலிருந்து இன்னொரு தாளத்துக்கு மாற ஒன்றரை நிமிசமாகுமாம். அத்தனை ஈர்ப்பு கொண்டது இந்த பறை இசை. திருமணம், திருவிழா, இறப்புன்னு எல்லாத்துக்குமே இந்த பறை இசை ஒலிக்கப்பட்டது. எப்பேற்பட்ட மனதிடம் கொண்டவரையும் அசைச்சு பார்க்கும் இந்த இசை. ஆனா, இப்ப அமங்கலத்தின் அடையாளமாகிட்டுது:-(

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...