மூன்றாவது இலை தான் தினகரன் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தனது வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் தஞ்சாவூரில் நேற்று பிரச்சாரம் செய்த கமல் தினகரனை விமர்சனம் செய்தார்.

இரட்டை இலையில் மூன்றாவது இலைதான் தினகரன். பரிசுப்பெட்டியை கொடுத்து விட்டு கஜானாவை காலி ஆக்கி விடுவார் என பேசியுள்ளார்.

தஞ்சைப்பகுதி டி டிவி தினகரனின் சொந்த பகுதி என்பதும் அருகில்தான் மன்னார்குடி ஏரியாவும் தினகரன் சார்ந்த ஆதரவாளர்களும் உள்ளனர் என்பதும் ஓரளவு அமமுக வாக்குகளை பெறும் பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.