Connect with us

பாஜகவில் இணைகிறார்களா மூன்று திரையுலக பிரபலங்கள்

செய்திகள்

பாஜகவில் இணைகிறார்களா மூன்று திரையுலக பிரபலங்கள்

தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு அதலபாதாளத்தில் உள்ள நிலையில் பாஜக தமிழகத்தில் காலூன்ற திரையுலக பிரமுகர்களை இழுக்கும் முயற்சியில் கடந்த சில வருடங்களாக அக்கட்சியின் மாநிலத் தலைமை முயன்று வருவது குறித்து செய்திகள் அவ்வப்போது வெளிவந்தது. சமீபத்தில் கூட நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மூன்று திரையுலக பிரபலங்களுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவர் சரத்குமார் என்று கூறப்படுகிறது. தற்போது சரத்குமார் அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். இருப்பினும் அவரது கட்சியை பாஜகவுடன் இணைத்து அவருக்கு ஒரு பெரிய பொறுப்பு கொடுக்கவும் பாஜக முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

அதேபோல் தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் இருதுருவமாக இருந்த பாக்கியராஜ் மற்றும் டி ராஜேந்தர் ஆகிய இருவரையும் பாஜகவை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இப்போதைக்கு இருவரும் மறுப்பு தெரிவித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

ஆனால் அதே நேரத்தில் பாக்யராஜ், டி ராஜேந்தர் ஆகிய இருவருக்கும் ஒரு நல்ல பதவி கொடுத்தால் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனது நிலையை நிரூபிக்க திரையுலக பிரபலங்களை இழுக்கும் வேலையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது

Continue Reading
To Top