திருப்பாவை பாடலும், விளக்கமும் – 3

8e595ae8ca5c0d816a9010cb2560e84b

பாடல்

ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து — ஏலோர் எம்பாவாய்.

பாடலின் பொருள்

மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி
நாம் நோம்பிற்கு நீராடினால்
நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும் (அதனால்)
செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும்.
அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும்.
பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று
வள்ளல்களை போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க
குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்.

திருப்பாவை பாடல் முழுக்க கிருஷ்ணாவதாரத்தை பற்றியதாகவே இருக்கும்.  மூன்று பத்துகளாக பாடல்களை பிரித்து பாடி இருக்கிறாள். முதல் பத்து பாடலில் ஒரு பாடலில் வாமண அவதாரத்தை பத்தியதாகும்.திருமாலின் காலடி பட்டாலே மோட்சம்தான். அதனால்தான் அதை உத்தம அவதாரம்ன்னு சொல்கிறாள்.  பகவானை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும். வைகுண்ட பதவியும் கிடைக்குமென்பது ஆண்டாள் வாக்கு. இப்பாடல் திருக்கோவிலூர் உறையும் உலகளந்த பெருமள் பற்றி பாடப்பட்ட பாடலாகும். 

திருப்பாவை பாடலும் விளக்கமும் தொடரும்..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews