காங்கிரஸ் இனி தேறாது: மூன்றாவது அணிக்கு அச்சாரமிடும் இரு முதல்வர்கள்

சமீபத்தில் நடைபெற்ற மூன்று மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி இரு மாநிலங்களில் அந்த கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை என்பது பரிதாபம்

இந்த நிலையில் அகில இந்திய அளவில் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க இனி காங்கிரஸ் தேறாது என்ற முடிவை அனைத்து அரசியல் கட்சிகள் எடுத்துவிட்டதாக தெரிகிறது.

எனவே வலுவான பாஜகவை எதிர்க்க அகில இந்திய அளவில் மூன்றாவது அணி அமைக்க பாஜகவின் எதிர்ப்பு கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. குறிப்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்த முயற்சிக்கு அச்சாரமிட்டுள்ளனர். இந்த மூன்றாவது அணியில் தெலுங்கு தேசம், அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவுக்கு வரும் 2019ஆம் ஆண்டு தேர்தலில் கடுமையான போட்டியை கொடுக்கலாம் என்று கருதப்படுகிறது.