தில்லுக்கு துட்டு 2 படம் நாளை ரிலீஸ்

திரையுலகில் லொள்ளு சபா என்ற் காமெடி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்து அதன் மூலம் மன்மதன் படம் மூலம் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்த சந்தானம் அதன் பிறகு பல டஜன் படங்களில் காமெடி செய்து முன்னணி காமெடி நடிகரானார். ரஜினிகாந்த் உட்பட எல்லோருடனும் காமெடி செய்து முன்னணி இடத்தை பிடித்த சந்தானம் சிறிது வருடங்களாக, காமெடி ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார்.

அப்படியாக வெளியான சில படங்கள் சந்தானத்தின் சொந்த படங்களும் அடக்கம். இதற்கு முன் தில்லுக்கு துட்டு என்ற படத்தில் காமெடி ஹீரோவாக நடித்திருந்தார். அது ஓரளவு வெற்றியும் பெற்றது. இவரை லொள்ளு சபா மூலம் புகழ்பெற்றவராக்கிய இயக்குனர் ராம்பாலா தான் தில்லுக்கு துட்டு படத்தை இயக்கினார்.இப்போது தில்லுக்கு துட்டு 2வையும் அவரே இயக்குகிறார்.

டிரெய்லரே அட்டகாசமாக வெளியாகி இருந்தது. நாளை இப்படம் வெளியாகிறது. சிரிப்புக்கு இப்படம் கியாரண்டி என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காமெடி கலந்த திகில் படம் இதுவாகும்.