Connect with us

தேங்காய் உடைப்பதில் இத்தனை விசயமிருக்கா?!

ஆன்மீகம்

தேங்காய் உடைப்பதில் இத்தனை விசயமிருக்கா?!

thengai

கோவிலுக்கு போகும்போதும், வீட்டில் பூஜையின்போதும் தேங்காய் உடைப்பது நமது வழக்கம். பூஜையின்போது தேங்காயினை உடைக்கும் வழக்கம் எதனால் உண்டானது என்பதை முன்னொரு பதிவில் பார்த்திருக்கோம் . இந்த பதிவில் நாம் தேங்காய் உடைக்கும் தென்படும் அறிகுறிகளை பார்ப்போம்..

* தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்.

*தேங்காய் ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும்.

* சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும்

* ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும்

*உடைக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் & பொருள் இழப்பு ஏற்படும்.

thengai

*நீளவாக்கில் உடைந்தால் தனம் அழிந்து துன்பம் உண்டாகும்

* முடிப்பாகம் இரு கூறானால் தீயினால் பொருள் சேதம்

(9) முடிப்பாகம் இரண்டாக உடைந்து அந்த இரு துண்டுகளோடு அவற்றின் ஓடு உடனே தெறித்து வீழ்ந்தால் நோய்களினால் துன்பம் ஏற்படும்

* சிறு, சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு & ஆபரண லாபம் சேரும்.

* ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும்பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் வேண்டும் காரியம் வெற்றியை தரும்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top