தேங்காய் சுடும் பண்டிகை பற்றி தெரியுமா?!

89c82a71a3c6dd1e2b0d10fc7945f277-1

ஆடி மாதம் முழுக்க பண்டிகைக்கு பஞ்சமிருக்காது. ஆனாலும் காவிரி பாயும் பக்கமெல்லாம் ஆடிமாத கொண்டாட்டம் சற்று தூக்கலாகவே இருக்கும். ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு…என பல கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டாலும் ஈரோடு, சேலம், தர்மபுரி சுற்றுவட்டாரத்துக்கென தனியாய் ஒரு பண்டிகை உண்டு. அது என்னவென்றால் தேங்காய் சுடும் பண்டிகை..

அதென்ன தேங்காய் சுடும் பண்டிகையென தெரிந்துக்கொள்ளலாம்..

96623c69ee60f1d74b8c4018e7bf05ec

முற்றிய தேங்காயினை எடுத்து, நல்லா மழுமழுன்னு தேய்த்து(சபரிமலைக்கு இருமுடி கட்டும்போது தேங்காயினை தேய்ப்பதுபோல்), முக்கண்ணில் ஒரு கண்ணினை தோண்டி, உள்ளிருக்கும் நீரினை வெளியேற்றி, பச்சரிசி, நாட்டு வெல்லம், வறுத்த எள், உடைத்த பச்சைப்பயிறினை முக்கால் பங்கும், தேங்காயிலிருந்து வெளியேற்றிய நீர் கால்பங்கும் சேர்த்து தேங்காய்க்குள் திணித்து, அழிஞ்சில் குச்சியை சீவி, திறந்த தேங்காய் கண்ணில் சொருகி, மஞ்சள் பூசி நெருப்பினில் சுடவேண்டும்.

8a04eba7f25f65c8c19edbad919330bf

சுட்ட தேங்காயை கோயிலுக்கு எடுத்துக்கொண்டு போய் உடைத்து , சாமிக்கு வைத்து வழிபடனும். தேங்காயில் நாட்டுச்சர்க்கரையின் ருசி ஏறி, எள், தேங்காய் வாசனையோடு மணமும் ருசியுமாய் அமர்க்களமாய் இருக்கும்.

14a81b8d5865584a6b312d8d77a88b96

இந்த தேங்காய் சுடும் பண்டிகை எப்படி வந்தது என்றால், அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று, ‘ஆடி18 அன்னிக்கு முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்லனும்ன்னு யுத்தம் தொடங்கும் நாளன்று, பாண்டவர் படையை சேர்ந்தவர்கள்,  விநாயகர் மற்றும்  அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்து தர்மம் ஜெயிக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார்களாம். போர்க்களத்தில் பாத்திரம் கிடைக்குமா?! அல்லது காய்கள்தான் கிடைக்குமா?! அதனால தேங்கய்க்குள் அரிசி, வெல்லம், எள், ஏலக்காய், உப்பு சேர்த்து சுட்டு படைச்சு, போரில் வென்றதால் அன்றிலிருந்து ஆடி 1 அன்னிக்கு இப்படி தேங்காய் சுடும் பூஜை உண்டானதாம்….

அனைவருக்கும் ஆடி 1 வாழ்த்துக்கள்


புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.