Connect with us

உலக பேட்மிண்டன் போட்டியின் வெற்றி எனக்கு நம்பிக்கை அளிக்கிறது – சிந்து

விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டியின் வெற்றி எனக்கு நம்பிக்கை அளிக்கிறது – சிந்து

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பி.வி.சிந்து கலந்து கொண்டார்.

உலக பேட்மிண்டன் போட்டியின் வெற்றி எனக்கு நம்பிக்கை அளிக்கிறது - சிந்து

அப்போது அவர் கூறுகையில், “என் மீதான பொறுப்பும் அதிகரித்துள்ளதை நான் உணர்கிறேன். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் என்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, அதற்கேற்ப நான் செயல்படுவேன்.

உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் பெறுவது என் கனவாக இருந்தது. அது இன்று நனவாகி, எனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

 இதுவரை ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவியநான், கடின உழைப்பினால் மட்டுமே இந்த வெற்றியினைப் பெற்றேன்.

எனது பெற்றோருக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறேன். மேலும் நம் நாட்டிற்கு மேலும் மேலும் கோப்பைகளை வென்று தருவேன் என உறுதி அளிக்கிறேன்.

 
2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி என்னுடைய இலக்கு என்றாலும், அதற்கு முன் விளையாடும் போட்டிகளிலும் விளையாடி, வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்று கருதியுள்ளேன், மேலும் அது எனக்கு ஒலிம்பிக்கில் வெற்றிபெற உதவிகரமாக இருக்கும்  என்றார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top