Connect with us

சவுரவ் கங்குலியின் நெருங்கிய உறவினருக்கு கொரோனா: பெரும் பரபரப்பு

செய்திகள்

சவுரவ் கங்குலியின் நெருங்கிய உறவினருக்கு கொரோனா: பெரும் பரபரப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் நெருங்கிய உறவினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரரரும் முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரருமான சினேகாஷி என்பவரின் மனைவிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சினேகாஷிஷின் மாமியார் மற்றும் மாமனாருக்கு கொரோனா பாசிட்டிவ் கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சினேகாஷி மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சினேகாஷிக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தூள்ளது

சினேகாஷி மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து மருத்துவர்கள் கூறியபோது சினேகாஷி மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு மூன்று முறை நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளனர்.

சவுரவ் கங்குலியின் நெருங்கிய சகோதரர் மனைவிக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
To Top