Connect with us

தோற்க காரணம் ரிஷப் பண்ட்தான்… கடுப்பான ரசிகர்கள்!!

விளையாட்டு

தோற்க காரணம் ரிஷப் பண்ட்தான்… கடுப்பான ரசிகர்கள்!!

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி  தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அதிரடியாக ஆடிய வங்காளதேச அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்றது.

தோற்க காரணம் ரிஷப் பண்ட்தான்… கடுப்பான ரசிகர்கள்!!

இந்திய அணி வரலாறு காணாத அளவு முதல் முறையாக வங்களாதேசத்திடம் தோல்வியுற்று சாதனை செய்துள்ளது.

இளம் வீரர்களை மட்டுமே கொண்டு முன்னணி வீரர்கள் இல்லாமல் வங்கதேசம் வெற்றி பெற்றதற்கு இந்திய அணிதான் முதல் காரணம் என்கிறார்கள் ரசிகர்கள்.

அதாவது இந்திய அணி முதலில் பேட்டிங்க் செய்து தேவையான அளவு ரன்களைக் குவித்தது, ஆனால் பவுலிங்கில் எதிரணியை வீழ்த்த முடியாமல் தடுமாறிப் போனது. அதுமட்டுமல்லாது டிஆர்எஸ் முடிவுகளிலும் தேவையில்லாத முடிவுகளை எடுக்கப் போக அதுவும் தோல்வி அடைந்தது.

இளம் வீரர் ரிஷப் பண்ட் செய்த தவறுகள்தான் தோல்விக்கு காரணம் என்ற ஒரு பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அவர் நிதானமாக ஆடுகிறேன் என்ற பெயரில் 26 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் ரசிகர்கல் கடுப்பாகிப் போயினர்.

இந்திய அணியின் பந்துவீச்சின் போது சாஹல் பந்து வீசியபோது இரண்டு முறை எல்பிடபுள்யூ வாய்ப்புகளை கேட்காமல் கோட்டை விட்டார்.

அடுத்து பந்து எட்ஜ் ஆகி வந்ததாக நினைத்து அவுட் கேட்க, அதுகுறித்து ரிவியூ கேட்டு அது ஒரு வகையான பிரச்சினை ஆனது.

அதனால் ரசிகர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி, ரிஷப் பண்ட் தான் தோல்விக்கு காரணம் என்று விமர்சித்து வருகின்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top