Connect with us

அடுத்த தமிழக முதல்வர் ரஜினிதான்: கமல் சகோதரர் கணிப்பு

பொழுதுபோக்கு

அடுத்த தமிழக முதல்வர் ரஜினிதான்: கமல் சகோதரர் கணிப்பு

தமிழக அரசியலில் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்து அதற்கான சர்வேக்களும் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் ரஜினியின் பெயர் தான் வெற்றி பெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் கமலஹாசனின் சகோதரரும் தேசிய விருது பெற்ற நடிகருமான சாருஹாசன் தனது ஃபேஸ்புக்கில் அடுத்த முதல்வர் ரஜினிதான் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் தான் என்றும், இந்த கருத்தை ஒப்புக் கொள்ளாதவர்கள் என்னை முட்டாள் என்று அழைக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த ஆண்டு உங்களை நான் புரிந்து கொள்வேன். அடுத்த ஆண்டு நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்று சாருஹாசன் கூறியுள்ளார்.

சொந்த தம்பி கமல் கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் சாருஹாசன் இவ்வாறு கூறியிருப்பது கமல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

The next CM will be from Karnaataka Those who do not agree … just call me a fool. I can understand you this year… you can understand me next year.

Posted by S. Charu Hasan on Friday, 27 April 2018

Continue Reading

அதிகம் படித்தவை

To Top