லாபத்தில் தன்ஷிகாவும் உண்டு

பிரபல இயக்குனர் ஜனநாதன். இயற்கை படம் மூலம் திரையுலகத்துக்கு அறிமுகமான இவர் பல சிறப்பான திரைப்படங்களை கொடுத்துள்ளார். பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை , ஈ போன்ற படங்கள் இவர் இயக்கியதில் முக்கியமான படங்கள்.

இவரின் படங்களில் கம்யூனிசம், பொதுவுடமை கருத்துக்கள் போன்றவை அதிகம் இருக்கும்.

இவர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வரும் படம் லாபம். வித்தியாசமான கதையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் புதிதாக நடிகை தன்ஷிகாவும் இணைந்துள்ளார்.