35 வருடத்துக்கு பிறகு டிஜிட்டலில் வரும் ரஜினி படம்- தங்க மகன் டிரெய்லர் வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1984ம் ஆண்டு வந்த படம் தங்க மகன். ரஜினிகாந்த், பூர்ணிமா, தேங்காய் சீனிவாசன், சில்க் ஸ்மிதா மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்தை மறைந்த இயக்குனர் ஜெகநாதன் இயக்கி இருந்தார்.

வா வா பக்கம் வா, பூமாலை ஒரு பாடல் ஆகுமா போன்ற பாடல்கள் இளையராஜா இசையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படம் டிஜிட்டலாக ரீமாஸ்டர் செய்யப்பட்டு வெளியானது.

இப்படத்தை சத்யா மூவிஸ் தயாரித்திருந்தது. அதே போல் இப்போது மீண்டும் சத்யா மூவிஸ் தனது தயாரிப்பான தங்க மகன் படத்தினை ரீ மாஸ்டர் செய்து வெளியிடுகிறது.

அதற்கான டிரெய்லரை சத்யா மூவிஸ் நேற்று வெளியிட்டுள்ளது.