காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலுவுக்கு ஆர்மி ஆரம்பித்த நெட்டிசன்ஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் தங்கபாலு. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது மத்திய அமைச்சராகவும் இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தவர் இவர்.

தமிழ்நாட்டுக்கு நரேந்திர மோடி பொதுக்கூட்ட மேடைக்கு பேச வந்தால் ஹெச்.ராஜா அவர் பேசுவதை மொழி பெயர்ப்பார். அது போல காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி நேற்று முன் தினம் பொதுக்கூட்ட மேடையில் நாகர்கோவிலில் பேசினார். அதை தங்கபாலு மொழி பெயர்த்தார். அவர் மொழி பெயர்த்ததில் பாதி விஷயங்கள் தவறாகவே இருந்தது.

சில விஷயங்களில் ராகுல் சொல்லாததை எல்லாம் தங்கபாலு மொழி பெயர்த்தார்.

குறிப்பாக நரேந்திர மோடி சிறையில் அடைக்கப்படுவார் என என்னென்னவோ மொழி பெயர்த்தார். அவர் மொழி பெயர்க்கும்போது பெரும் குழப்பம் நிலவியது.

இதை நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவே நேற்று வலம் வந்தது.

தங்கபாலு ஆர்மி என்ற பெயரில் ஹேஸ் டேக்கும் நேற்று டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.