தமிழனின் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் கோலங்கள்

10b79ce82fbfca121051a487fee1596d-1

 தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. சில பழக்க வழக்கங்களின்பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்துப்போக இந்தகாலத்து பெண்கள் மூடநம்பிக்கைன்னு நிறைய விசயங்களை ஒதுக்கினாலும் கோலம் போடுறதை மட்டும் நம்ம பொண்ணுங்க இன்னும் ஒதுக்கல. அறிவியல் காரணம் புரிஞ்சு செய்யுறாங்களோ இல்லியோ! ஆனா, வீடு அழகா இருக்கவாவது விதம் விதமா போடுறாங்க. ஆனா புள்ளி வச்சு கோலம் போடாம ரங்கோலி கோலம் போடுறாங்க. கோலத்தில் பலவகை உண்டு. அவை என்ன கோலம் போடுவதால் என்னென்ன நன்மைகள்ன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.

8d9b28562e0270e0e07e9e243a574ff6-1

எந்த கோலத்தை வேணும்ன்னாலும் எந்த நாளிலும் போட்டுடமுடியாது. பிறந்த குழந்தையை தொட்டில்ல போட, முதன்முதல்ல வீட்டுக்கு கூப்பிட்டு வரும்போது தொட்டில் கோலம் போடனும்.  சுபிட்சத்தை வரவைக்க ஹிர்தய கோலம், கல்யாணம் செய்து வரும், வீட்டுக்கு முதன்முறையாய் வரும் புத்தம்புது தம்பதிகளை வரவேற்க மனைக்கோலம்ன்னு போடனும். இதில்லாம வட்டக்கோலம், கம்பிக்கோலம், புள்ளிக்கோலம், தந்திரிக் கோலம், ரங்கோலி கோலம்ன்னு விதம் விதமா இருக்கு. ஆனா, இறப்பு நடந்த வீடு, திதி, அமாவாசை தினங்களில் வாசலில் கோலம் போடக்கூடாது..

c6f39d9e011b19748d53f248a8473da1

கோலமென்பது வெறும் அழகுக்காக மட்டுமில்லாமல் தெய்வீக சக்தியை வீட்டுக்குள்  வரவைக்கும் எந்திரமாகும். அதனாலேதான் கோலத்தினை வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் வரையப்படுகின்றது. மேலும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் கோலமிடுவதும் அவசியம்ன்னு நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். அதற்கு காரணம் மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழும்.  மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது. இந்த மாற்றத்தின்போது பூமினுடைய சக்திநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின்போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திட்டமாக்குவதுலாம் கோலம் கலையாமல் இருக்க உதவுது.  அதேநேரம்,  சாணம் சிறந்த கிருமிநாசினியும்கூட. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.

35f1cc0e421d6f2af6f773be48a3e923

சூரிய உதயத்திற்குமுன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்கு தேவையான முழுமையான பிராணவாயுவை நம் உடல் முழுக்க பரவ செய்யும்.  இதனால் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் அந்நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாமல் ஓரளவுக்கு சுத்தமான காற்று சுவாசிக்க கிடைக்கின்றது. இது,  நாள் முழுக்க நம்மை சுறுசுறுப்பா வச்சிருக்க உதவும்.  குனிஞ்சு நிமிர்ந்து கோலம் போடும்போது இடுப்பெலும்பு வலுப்பெறுகிறது.   ஆனா, கோலம் போடும்போது செருப்பணிந்து கொண்டு கோலம் போடக்கூடாது.

08bc54e2a8209ad75ef0f81002b8783e

புள்ளியிட்டு கோலம் போடும்போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படும். கோலமிடுவது நம்முடையை சிந்தனை சிதறலையும் தடுக்கும் ஒருவித பயிற்சியாகும். மேலும் புள்ளிக்கோலம் போடும்போது புள்ளிகளை உற்று நோக்கும்போது கண்பார்வை அதிகரிக்கிறது. இதனாலதான் சாகும்வரைகூட சில பாட்டிங்க கன்ணாடி போட்டதில்லை.   

afcbf1b4adb984a03e445be4f2459ec9-1

அரிசிமாவுக்கொண்டு கோலம் போடுவது எறும்பு மாதிரியான சிறு பூச்சிகளுக்கும், குருவி மாதிரியான சிறு பறவைகளுக்கும் உணவாகிறது. கோலம் என்பது மனிதனின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் என்ற தமிழனின் தத்துவம்,  பகுத்துண்டு வாழும் நம் மண்ணுக்கே உரிய பண்பாகும். 

b1342a94a67f752852e56f5211668769-1

கோலம் போடுறதால ஐந்து குண நலன் நமக்கு கைவரும். 

b1342a94a67f752852e56f5211668769-1

நேர மேலாண்மை..

என்னதான் திட்டமிட்டிருந்தாலும் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது பலருக்கு குதிரைக்கொம்புதான். ஆனா, ஏதோ ஒரு காரணம் இருந்தால் நிச்சயம் எழுந்திருக்க தவறமாட்டோம். அந்தக் காரணம் கோலமாக அமைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு கோலத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் எனத் திட்டமிடும் வழக்கம் நம் அன்றாட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு உதவும்.

3c4071fb6d6e73bdcc95ac62d6877308

2. படைப்பாற்றல்

ஆயக்கலைகள் 64ல் கோலம் போடுவதும் ஒரு கலைதான்.  கோலப் புத்தகம், இணையதளங்களை பார்த்து கோலம் போடுவது,  இவையெல்லாம் சில நாட்களையே தள்ள முடியும். ஒரு கட்டத்தில் நாமே புதிதான கோலம் போட்டால் என்ன யோசனை எழும். அப்போது இதுவரை நாம் போட்டிருக்காத கோலம் என்ன என யோசிக்க தொடங்கும்போது, உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளியும் விழித்துக்கொள்வார்.

c7f11fca5fbde2a6c48e302bd2b5b3f3

3. சிக்கலைத் தீர்க்கும் பொறுமை ….

 32 புள்ளிகள் வைத்து, அதனை யொட்டி நேர்புள்ளி, ஊடு புள்ளிகள் வைத்து முடிப்பதற்குள்ளேயே முக்கால் மணி நேரமாகியிருக்கும். அதற்கு அடுத்து, கவனமாக பூக்கோலம் அல்லது சிக்கு கோலமாக போடுவோம். அதற்கு முக்கால் மணிநேரம். இந்த ஒன்றரை மணிநேரத்தில் கவனமும் நிதானமும் இருந்தால் மட்டுமே உங்கள் மனதில் இருக்கும் கோலம் வாசலுக்கு வரும். இதுவே தினசரி செய்யும்போது அந்த கவனமும் நிதானமும் உங்களின் இயல்பு குணமாக மாறிவிடும். இது இரண்டும் இருந்தாலே எவ்வளவு பெரிய சிக்கலையும் தீர்த்துவிடலாம்.

397fedd8d8ef639620618d0572603f1a

முடிவெடுக்கும் திறன்…

இன்று இந்த பூக்கோலமா?! சிக்கு கோலமா என்ற முடிவு எடுக்கிற திறனைச் சொல்லலை. சிறப்புத் தினங்களுக்கு ரங்கோலி ஸ்டைலில் புதிதாக ஏதேனும் முடிவு செய்வோம். அதற்காக, எந்த டிசைன் எல்லோருக்கும் பிடிக்கனும், என்ன கலர் கொடுக்கலாம்.. அது பொருத்தமா இருக்குமான்னு முடிவு செய்யுறோமில்லையா அதைதான் சொல்றேன்.  இது உங்களுக்கு ரசனையை மட்டும் கொடுக்கலை. சரியான இடத்தில் பொருத்தமான முடிவெடுக்கும் திறனையும் கொடுக்கும். அது நீங்கள் ஜவுளி கடையில் புடவை தேர்வு செய்வதிலிருந்து அலுவலகத்தில் எடுக்கும் முடிவுவரை நீளும்.

4b519af1c09874836974ae9a3d4a4baa

5. போட்டி மனப்பான்மை:

அக்கம்பக்கத்து வீட்டோடு ஆரோக்கியமான போட்டிகள் இருக்கலாம். ஆனா, பொறாமைதான் இருக்கக்கூடாது.  நாம தினமும் கோலம் போடுவதைப் பார்த்து அக்கம் பக்கத்து வீடுகளிலும் கோலம் போட ஆரம்பித்துவிடுவார்கள். நல்ல பழக்கத்தை அவர்களும் தொடங்குவது நல்லதுதான். அவர்களைவிட சிறப்பான கோலம் போடும் மனநிலையை உங்களுக்கு தரும். இது, வேலை செய்யும் இடங்களிலும் பிரதிபலிக்கும். உங்களுக்கு பதவி உயர்வையும் பெற்றுத் தரும்

328c366e7911168f6cb5ef01078ebd56

இனியும் நம்ம வீட்டு வாசல்ல ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போடலாம்.  கோலம் போட்டு முடியும் திசையை வைத்து கூட அன்றைய பொழுது எப்படி போகும்ன்னு சொல்வாங்க. கோலம் மேற்கு, கிழக்கு நோக்கி முடிந்தால் நல்லது. 

இனி வாசல்ல ஸ்டிக்கர் கோலம் ஒட்டுவீங்க?! கோலத்தின் மகத்துவம் தொடரும்…..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...