Connect with us

இறங்கி அடிச்சிருக்காரு தல: விசுவாசம்’ படம் குறித்து தம்பிராமையா

பொழுதுபோக்கு

இறங்கி அடிச்சிருக்காரு தல: விசுவாசம்’ படம் குறித்து தம்பிராமையா

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தம்பிராமையா.

இந்த நிலையில் தம்பிராமையா தனது மகன் நடித்துள்ள ‘மணியார் குடும்பம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘எறங்கி அடிக்கிறது எறங்கி அடிக்கிறதுனு சொல்லுவாங்கள்ல..? எறங்கி… அடிச்சிறுக்காரு தல விஸ்வாசம் படத்துல… என்று கூறியுள்ளார்.

‘விசுவாசம்’ படத்தின் அஜித் கெட்டப்பு அமைதியின் சொரூபமாக தெரிந்தாலும் அஜித் இந்த படத்தில் ஆவேசமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளதாகவும், இந்த அளவுக்கு அவர் இதுவரை எந்த படத்திலும் எறங்கி அடிக்கவில்லை என்றும் படக்குழுவினர்களும் கூறியுள்ளனர்.

அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top