விஜய் 65 படத்தை இயக்குபவர் யார்? புதிய தகவல்


c2d4d0fb7410825332937bd194d07283-2

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான ‘தளபதி 65’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை பாண்டிராஜ் இயக்குவார் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் உறுதி செய்யாத தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தளபதி 65 படத்தை பேரரசு இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விஜய்யிடம் பேரரசு பேச்சுவார்த்தை நடத்தி முடிந்து விட்டதாகவும் இந்த படத்தை பேரரசு தான் இயக்க உள்ளார் என்ற தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அட்லி உள்பட வேறு சில இயக்குனர்களின் பெயர்களும் ’தளபதி 65’ பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...