தடம் படத்தின் விதி நதியே பாடல் வெளியீடு

ஒரு காலத்தில் தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்து வந்தவர் அருண் விஜய். இவர் தோல்விப்படங்களை கொடுத்த காலத்தில் இவரது பெயர் அருண்குமார் என்று இருந்தது. முன்னணி நடிகராக இருந்த விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் தொடர்ந்து சில படங்களில் நல்ல முயற்சி எடுத்து நடித்தாலும் இவரால் சோபிக்க முடியாத காலகட்டம் இருந்தது.

அந்த நேரத்தில் இவர் கூட்டணி சேர்ந்த தடையற தாக்க நல்லதொரு பெயரையும் வெற்றியையும் முன்னணி நடிகரில் ஒருவராகவும் இவருக்கு அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தது.

தொடர்ந்து மகிழ் திருமேனியுடன் ஒரு படம் செய்தார் அந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து மகிழ் திருமேனியின் இயக்கத்தில் தடம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதிரடி ஆக்சன் படமான இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இப்படத்தில் இடம்பெற்ற விதி நதியே என்ற பாடல் லிரிக்கல் வீடியோவாக வெளியிடப்பட்டு பாராட்டு பெற்றுள்ளது.