Connect with us

தடம் பட அப்டேட்ஸ்

பொழுதுபோக்கு

தடம் பட அப்டேட்ஸ்

அருண் விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் தடையற தாக்க சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக மம்தா நடித்திருந்தார்.

அருண் விஜய்க்கு இப்படம் ஒரு திருப்புமுனையான படமாக அமைந்தது. ஏனென்றால் நீண்ட காலம் சினிமாவில் நடித்து வந்தாலும் பெரிய நடிகரின் மகன் என்றாலும் இவரின் படங்கள் பெரிய அளவில் ஈர்ப்பை வெளிப்படுத்தியதில்லை.

முதல் முறையாக இவரின் தடையற தாக்க நல்லதொரு முன்னேற்றத்தை இவருக்கு கொடுத்தது. இப்படத்தை இயக்கியவர் மகிழ் திருமேனி. அதற்கு பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைந்தாலும் அது வரவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் தடம் படம் மூலம் தடம் பதிக்க இருக்கின்றனர்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் டிரெய்லரை நடிகர் ஜெயம் ரவி நேற்று வெளியிட்டுள்ளார்.

அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படம் வரும் மார்ச் 1 ம்தேதி வெளிவருகிறது.

Continue Reading
To Top