Connect with us

ஒரே நாளில் கோடீஸ்வரர்: காரணம் இரண்டே இரண்டு கல்

செய்திகள்

ஒரே நாளில் கோடீஸ்வரர்: காரணம் இரண்டே இரண்டு கல்

தான்சானியா நாட்டின் சுரங்க தொழிலாளி ஒருவருக்கு கிடைத்த இரண்டே இரண்டு கற்களால் அவர் இன்று கோடீஸ்வராகியுள்ளார்.

தான்சானியா நாட்டை சேர்ந்த சுரங்க தொழிலாளியான சானினியு லைசர் என்பவர் அந்நாட்டில் உள்ள சுரங்கம் ஒன்றில் இரண்டு ரத்தினக்கற்களை கண்டுபிடித்துள்ளார். ‘டான்சனைட்’ என்று அழைக்கப்படும் இந்த ரத்தினக்கற்கள் இதுவரை கண்டுபிடித்ததிலேயே மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது.

ஒரு ரத்திக்கல் 9.27 கிலோவும், மற்றொன்று 5.8 கிலோவும் எடையாக கொண்ட இந்த ரத்தினக்கற்களுக்கு அந்நாட்டு அரசு அவருக்கு 7.74 பில்லியன் தான்சானியன் ஷில்லிங்ஸ் கொடுத்துள்ளது. அதாவது இது இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து தெரிவித்த சுரங்க தொழிலாளி சானினியு லைசர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தபோது, ‘எனக்கு கிடைத்த இந்த பணத்தை வைத்து ஷாப்பிங் மால் கட்டுவேன் என்றும் மீதிப்பணத்தை பள்ளி கட்டி அதில் குழந்தைகளுக்கு இலவச கல்விக்கு ஏற்பாடு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

நான் படிக்கவில்லை என்பதால் என்னுடைய ஊரில் உள்ளவர்களாவது படிக்க வேண்டும் என்றும் குறிப்பாக இந்த பகுதியில் இருக்கும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர என்னால் முடிந்ததை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

சானினியு லைசரின் நல்ல உள்ளத்தை கேள்விப்பட்டு அந்நாட்டு அதிபர் சானினியு லைசருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top