Connect with us

கொரோனாவுக்கு 13 வயது சிறுவன் பலி: அதிர்ச்சியில் தமிழகம்

பொழுதுபோக்கு

கொரோனாவுக்கு 13 வயது சிறுவன் பலி: அதிர்ச்சியில் தமிழகம்

தஞ்சையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது இதனை அடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் அந்த சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த சிறுவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த சிறுவன் மரணம் அடைந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது

13 வயது சிறுவன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது தமிழகத்தையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வயதானவர்கள் மட்டுமே கொரோனா வைரசுக்கு பலியாகி வந்த நிலையில் அதுவும் சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் ஆகியவைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகினர்.

ஆனால் தற்போது எந்தவித பாதிப்பும் இல்லாத 13 வயது சிறுவன் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது வைரஸின் வீரியம் அதிகமாகிவிட்டதோ என்று கூறப்பட்டு வருகிறது

Continue Reading
To Top