சாத்தான்குளம் கொலை எதிரொலி: பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு அதிரடி தடை

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இதுவரை ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இரண்டு காவலர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்-இல் உள்ள சில இளைஞர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தமிழக காவல்துறையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸை பயன்படுத்த வேண்டாம் என சற்றுமுன் தமிழக டிஜிபி அறிவுறுத்தல் செய்துள்ளார். இதனையடுத்து விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரண்ட்ஸ் போலீசுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களிலும் பிரண்ட்ஸ் போலீசுக்கும் தடை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலியாக தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டு வருவது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.