தமிழ் சினிமாவை கலக்கிய சங்கவி ஃபீவர்

அமராவதி படத்தின் மூலம் 93ம் ஆண்டு அறிமுகமானவர் சங்கவி. முதல் படத்தில் மிக பாந்தமாக அமைதியாக நடித்திருப்பார். இந்த படத்துக்கு பிறகு சங்கவி நடித்த படங்களில் எல்லாம் கவர்ச்சி தூக்கலோ தூக்கல்தான்.

சங்கவிக்காக படம் பார்க்க சென்ற ரசிகர்கள் பலர் அந்நாளில் உண்டு. சங்கவி நடித்த ரசிகன் படத்தில் மிக மிக அதிக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். குறிப்பாக சங்கவி இப்படத்தில் நடித்த காட்சிகள், விஜய் சங்கவிக்கு உண்டான பாத்ரூம் காட்சிகள் அதன் பின் சங்கவி, விஜய்க்கு உண்டான சில்லென சில்லென நீர்த்துளி பட்டு உட்பட பாடல்கள் அந்நாளைய ரசிகர்களுக்கு, சங்கவிக்கும் ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பித்தாலென்ன என்ற ரீதியில் இருந்தது.

இந்த காட்சிகளாலேயே இப்படம் நீண்ட நாட்கள் ஓடியது எனலாம்.

தொடர்ந்து விஜய் நடிக்கும் பல படங்களில் சங்கவியை கதாநாயகியாக்கி படத்தின் வெற்றிக்கு வித்திட்டனர். கோயமுத்தூர் மாப்பிள்ளை, விஷ்ணு உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு சங்கவி ஒரு முக்கிய காரணம் ஆவார்.

சங்கவியின் கவர்ச்சி பல படங்களுக்கு கை கொடுக்க அந்நாளைய தமிழ், தெலுங்கு படங்கள் பலவற்றில் சங்கவி நடித்தார். சங்கவியின் கவர்ச்சி உச்சத்தில் இருந்தது.

சும்மாவே தெலுங்கு படத்தில் கவர்ச்சி காட்சிகள் அதிகமாகத்தான் இருக்கும். இதில் சங்கவி வேறு நடித்தால் கேட்க வேண்டுமா எல்லா தெலுங்கு படங்களிலும் சங்கவியின் கவர்ச்சி உச்சத்தில் இருந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு 2000ம் ஆவது ஆண்டில் விஜய் நடிப்பில் வந்த நிலாவே வா படத்தில் சங்கவியும் இருந்தார். இந்த படத்தில் அதிரடி கவர்ச்சி எதையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக விஜய்யின் தோழியாக நடித்து விட்டு சென்றார்.

நாட்டாமை, லக்கிமேன், இனி எல்லாம் சுகமே, தினமும் என்னை கவனி,மன்னவா என பல படங்கள் சங்கவி நடித்த வெற்றிப்படங்கள் ஆகும்.

இதில் மன்னவா, இனி எல்லாம் சுகமே உள்ளிட்ட படங்கள் சங்கவியின் கவர்ச்சியை நம்பியே இருந்தது. இப்படங்கள் சுமாரான வெற்றியை பெற்றது.

சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சியை போல சங்கவியின் கவர்ச்சியும் 93ம் ஆண்டில் இருந்து 2000ம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை கலக்கியது என்று சொன்னால் மிகையாகாது.