தவறாக காண்பித்த தமிழ் சினிமா- சாதித்து காட்டிய இராமநாதபுரம்

இராமநாதபுரம் என்றாலே ஒடுக்கப்பட்ட ஒரு மாவட்டமாகவே இருந்து வந்தது. எத்தனையோ விசயங்களில் முன்னேறி வந்தாலும் தொடர்ந்து அது ஒடுக்கப்பட்ட மாவட்டமாகவே பார்க்கப்பட்டது.

சினிமாக்களில் கேலி செய்யப்படும் மாவட்டமாகவும், வன்முறைக்கான மாவட்டமாகவுமே பார்க்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தை அரசு அதிகாரிகள் தவறு செய்தால் தண்டனை கொடுக்கும் மாவட்டமாக இந்த மாவட்டத்துக்கு ட்ரான்ஸ்பர் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அப்படி ஒன்றும் மிகமோசமான மாவட்டம் இல்லை இராமநாதபுரம். சில வருடங்களுக்கு முன்பு வந்த நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் இராமநாதபுரம் என்பது செல்லவே கூடாத ஒரு பகுதி போல காமெடியாக அந்த படத்தின் இயக்குனர் சித்தரித்திருந்தது மாவட்ட மக்களை மிகவும் கவலையடைய செய்தது.

b47a08dd6ee20e347390a607fdc567c7

விஞ்ஞானி அப்துல் கலாம், நடிகர் கமல்ஹாசன், செந்தில் , குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண், இயக்குனர் ஆர் சி சக்தி, கே.எஸ் அதியமான், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ், சீயான் விக்ரம், ஜோதிட மேதை நம்புங்கள் நாராயணன் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் சினிமா பிரபல அறிவாளிகளை தந்ததும் இராமநாதபுரம் மாவட்டம்தான்.

இருப்பினும் இந்த மாவட்டத்தின் மீது எழுதப்படாத விதியாக மோசமான மாவட்டம், கல்வியில் பின் தங்கிய மாவட்டம், கலவரம் செய்யும் நபர்கள் அதிகம் வறட்சியான மாவட்டம், என திட்டமிட்டு பல பொய்கள் பரப்பபட்டது.

தமிழ்நாட்டில் அதிக குளிரும் இல்லாமல் அதிக வெப்பமும் இல்லாமல் மிதமான சீதோஷ்ண் நிலையில் இருக்கும் ஒரே மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம். இயற்கை அழகுடன் பல கிமீ பரப்பளவு கடற்கரை கொண்ட ஒரே மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம்.

இவ்வளவு சிறப்புகளை கொண்ட இராமநாத புரம் மாவட்டம் சில வருடங்களாக கல்வியிலும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. கடந்த சில வருடங்களில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவது குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான மாவட்டம் என மீடியாக்களாலும் சினிமா இயக்குனர்களாலும் தவறாக காண்பிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் கல்வியில் தொடர்ந்து சாதனை படைத்து வருவது வியக்கத்தக்கது.

இன்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கூட மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதை சினிமாக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அந்த காலத்தில் சொல்லி வைத்த விசயங்களை கேள்விப்பட்டு மாவட்டம் எப்படி இருக்கு என்று கூட பார்க்காமல் இராமநாதபுரம் மாவட்டத்தை தவறாக தொடர்ந்து காண்பிக்கும் சினிமாக்காரர்கள் இதை உணர வேண்டும்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.