தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்யவில்லை- விசு

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் ஒரு காலத்தில் மிக சிறந்த அற்புதமான படங்களான சம்சாரம் அது மின்சாரம், வரவு நல்ல உறவு, பெண்மணி அவள் கண்மணி, மணல் கயிறு உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கிய இயக்குனராகவும் இருந்தவர் விசு.

தனியார் டிவிக்களில் மக்கள் அரங்கம், அரட்டை அரங்கம் நிகழ்ச்சிகளின் மூலமும் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்தார் இவர்.

முன்பு அதிமுகவில் தீவிரமாக பணியாற்றிய விசு தற்போது சில வருடங்களாக பிஜேபிக்கு ஆதரவாக உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அனைத்து கட்சியினரும் முக்கிய நடிகர்கள், அரசியல்வாதிகளை வைத்து பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர்.

விசுவும் அவ்வாறு எல்லா வேட்பாளர்களுக்கும் குறிப்பாக பாஜக வேட்பாளர்கள் அனைவருக்கும் பிரச்சாரம் செய்கிறார்.

ஆனால் ஒரே கட்சியாக இருந்தாலும் தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என கூறி இருக்கிறார். காரணம் என்னவெனில் கடந்த 3 வருடத்துக்கும் மேலாக தான் அப்பாயின்மெண்ட் கேட்டும் தமிழிசையை நேரில் சந்திக்கவே முடியவில்லையாம்.

என்னை போன்றவர்களாலேயே நேரில் சந்திக்க முடியவில்லை என்றால் மற்ற எளிய மக்கள் நிலை என்ன என்று வினவியுள்ளார் விசு. அதனால் தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்யவில்லை என்றிருக்கிறார்.