20 இடங்களில் வெல்வோம் உளவுத்துறை கூறியுள்ளது- தமிழிசை

தேர்தல் நெருங்குகிறது அனைத்து கட்சிகளும் தேர்தல் ஜுரத்தில் கட்சிப்பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பத்திரிக்கைகள், ஊடகங்கள் அனைத்திலும் இது பற்றிய விவாதங்களையே பார்க்க முடிகிறது.

பாரதிய ஜனதா கட்சி ஜெயித்து மீண்டும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைக்குமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை

அதிமுக பாஜக கூட்டணி 20 இடங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறையின் தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை, பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து, நமது ராணுவம் சொல்வதை தான் நாம் நம்ப வேண்டும், அதை விடுத்து வேறு யாருடைய தவறான கருத்துக்களுக்கும் இடமளிக்க வேண்டாம் எனக்கேட்டுகொண்டார்.