சுவாமிக்குப் புழுங்கல் அரிசி சாதம் நைவேத்யம் செய்யலாமா?

5ecbeb236022979b1c7c4182d265195d-2

சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய வெண்பொங்கல், தயிர்சாதம், சுண்டல், சர்க்கரை பொங்கல், புளி சாதம், எலுமிச்சை சாதம் என செய்வதை பார்த்திருக்கிறோம். வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் தவிர்த்து மற்ற எலுமிச்சை, புளி சாதம், தயிர் சாதம்… என வரும் கலவை சாதங்களை புழுங்கல் அரிசியில் செய்வது வழக்கம். அப்படி புழுங்கல் அரிசியில் செய்த உணவினை நைவேத்தியம் செய்யலாமா எனக்கேட்டால் கூடாது என்பதே பதில்.

நெல்லிலிருந்து அப்படியே அரிசியை பிரித்தெடுத்தால் கிடைப்பது பச்சரிசி. நெல்லினை வேக வைத்து, பின்னர் வேகவைத்த நெல்லிலிருந்து அரிசியை பிரித்தெடுக்க கிடைப்பது புழுங்கல் அரிசி.

எந்த ஒரு தானியத்தினையும் ஒருமுறை வேக வைத்துவிட்டால் அதை உடனே நிவேதனம் செய்து விட வேண்டும். நெல்லை ஒரு முறை வேக வைத்து காய்ந்த பிறகு அரிசியாக்கிவிட்டால் பழைய சோறுக்குச் சமம் தானே? எனவே புழுங்கல் அரிசி நிவேதனத்திற்கு உகந்ததல்ல. பச்சரிசியே சிறந்தது. பிள்ளையார் சதுர்த்தியன்று இட்லி நிவேதனம் செய்வார்கள். இதற்குக் கூட புழுங்கல் அரிசியை உபயோகிக்காமல் பச்சை அரிசியிலேயே செய்வார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews