Connect with us

சுட்டு பிடிக்க உத்தரவு எப்போது

பொழுதுபோக்கு

சுட்டு பிடிக்க உத்தரவு எப்போது

சுட்டுப்பிடிக்க உத்தரவு என்ற படம் தயாராகி வருவது தெரிந்ததே. வங்கி கொள்ளையை மையமாக வைத்து பெரிய அளவில் படங்கள் வந்தது இல்லை. சில வருடங்கள் முன் நாணயம் வந்தது. அதற்கு முன்பு பல வருடம் முன்பு பாக்யராஜ் சில நிமிட காட்சிகள் தோன்றும் ருத்ரா படக்காட்சிகள் தான் மனதில் தோன்றுகிறது.

எத்தனையோ ஆங்கிலப்படங்கள் வங்கி கொள்ளையை மையமாக வைத்து வந்திருக்கும். தமிழில் இது போல படங்கள் குறைவு.

இந்த குறையை போக்க வர இருக்கும் படம்தான் சுட்டு பிடிக்க உத்தரவு.

இப்படத்தின் டிரெய்லர் எல்லாம் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.

இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சுட்டுப் பிடிக்க உத்தரவு. வரலாறு காணாத கொள்ளையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

வரும் ஜூன் 14ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது என இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top