Connect with us

சுஷாந்த் சிங் கொலையா? தற்கொலையா? தாய்மாமா சந்தேகத்தால் பரபரப்பு

செய்திகள்

சுஷாந்த் சிங் கொலையா? தற்கொலையா? தாய்மாமா சந்தேகத்தால் பரபரப்பு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நேற்று தற்கொலை செய்துகொண்ட தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது தற்கொலை அல்ல, கொலை என அவரது தாய் மாமா திடீரென சந்தேகம் எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சுஷாந்த் சிங் தாய்மாமா முன்னணி ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளும் நபர் இல்லை என்றும் அவரை யாரோ கொலை செய்து விட்டு தற்கொலை போல் நாடகமாடி உள்ளார்கள் என்றும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்ய வேண்டும் என்றும் முடிந்தால் சிபிஐ இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

சுஷாந்த் சிங் மிகவும் தைரியமானவர் என்றும் தற்கொலை செய்துகொண்டு இருக்க வாய்ப்பே இல்லை என்றும் சுஷாந்த் சிங் தாய்மாமா சந்தேகம் எழுந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆனால் இதுகுறித்து மும்பை போலீசார் கூறியபோது கொலைக்கான எந்த தடயமும் அங்கு இல்லை என்றும் கொலை செய்ய பலவந்தபடுத்தியதற்கான அடையாளம் எதுவும் இல்லை என்றும் எனவே இது தற்கொலை தான் என்றும் போலீசார் கூறியுள்ளனர்

இருப்பினும் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். சுஷாந்த் சிங் தாய்மாமா திடீரென சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலைதான் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகம் எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continue Reading
To Top