இயக்குனர் அட்லி மீது துணை நடிகை புகார்

இயக்குனர் அட்லியை தெரியாதோர் இருக்க முடியாது. வழக்கமாக அட்லி மீது சொல்லப்படும் தொடர் குற்றச்சாட்டு பழைய படங்களை காப்பியடிக்கிறார். அந்த பட தயாரிப்பாளர்களிடம் அனுமதி கேட்பதில்லை.

ராஜா ராணியை மெளன ராகத்தில் இருந்தும், தெறியை சத்ரியனில் இருந்தும், மெர்சலை பல படங்களில் இருந்து சுட்டதாக அட்லி மீது ஒரு நிரூபிக்க முடியாத புகார் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அட்லியும் இதை தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார்.

அட்லி தற்போது விஜயை வைத்து ஒரு படம் எடுத்து வருகிறார். விஜய் 63 என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் ஷூட்டிங்கில் அட்லி துணை நடிகைகளுக்கு சரி வர உணவு கொடுப்பதில்லை எனவும் மீந்து விட்ட உணவைத்தான் தருகின்றார் எனவும் கிருஷ்ணதேவி என்ற துணை நடிகை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.