சூப்பர் ஸ்டார் வதந்தி- எஸ்.ஜே சூர்யா விளக்கம்

கடந்த வெள்ளியன்று வெளியானது மான்ஸ்டர் திரைப்படம். இத்திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நெசன் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார்.

இவர் இதற்கு முன் ஒரு நாள் கூத்து படத்தை இயக்கியவர். இவரின் இரண்டாம் படமான இந்த படம் ஆங்கில படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் படம் பக்கா மாஸ் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.ச்

சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் பிடிக்கும் வகையில் அருமையாக இயக்கப்பட்டுள்ளது இப்படம்.

முதன்முறையாக எஸ்.ஜே சூர்யா படத்தை அனைவரும் பார்க்கும் ஆபாசம் அருவருப்பு, இரட்டை அர்த்த வசனம் எதுவும் இன்றி இப்படம் உள்ளது.

இப்படி பல வகையிலும் எஸ்.ஜே சூர்யா பாராட்டு பெற்று வரும் நிலையில் யாரோ அவர் அடுத்த சூப்பர் ஸ்டார் என கிளப்பி விட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த எஸ்.ஜே சூர்யா யாருப்பா இப்படி கிளப்பி விடுறது நான் அப்டி சொல்லவே இல்லையே என சொல்லி இருக்கிறார்.