சூப்பர் டீலக்ஸை பாராட்டிய அனுராக் காஷ்யப்

ஆரண்ய காண்டம் திரைப்படத்தை இயக்கிய பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா சூப்பர் டீலக்ஸ் என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில்தான் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த மாதம் 29 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
 

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் “சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பார்த்து மெய்மறந்து விட்டேன் என படத்திற்கு பாராட்டு தெரிவித்து. இப்படத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.ஆனால், அதை நானே விட்டுவிட்டேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
 

மேலும் தியாகராஜனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார் அனுராக் காஷ்யப்.