மலையாளக்காரர்களின் மனம் நெகிழ்வில் சன்னி லியோன்

சன்னி லியோன் இவரை தெரியாத ரசிகர்களே கிடையாது 18 வயதில் ஆரம்பித்து பல் போன கிழவர் வரை இவருக்கு ரசிகர் உண்டு. அந்த அளவுக்கு கவர்ச்சியில் பல ரசிகர்களை கிறங்கடித்து நிறைய ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமாகி உள்ளார்.

கனடா நாட்டை சேர்ந்த சன்னி லியோன் இந்தியாவில் குடியேறி பல ஹிந்தி படங்களில் அன்லிமிட்டெட் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

இப்போது இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு பல்லாயிரம் ரசிகர்கள் பெருகி வருவதால் தமிழ் மற்றும் மலையாளப்படங்களிலும் நடித்து வருகிறார்.

திருமணமானாலும் அதிரடி கவர்ச்சியில் நடித்து வரும் சன்னி லியோன். மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியாகியுள்ள மதுரராஜா படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன். இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பாடலுக்கு கேரளாவில் ரசிகர்கள் தியேட்டரில் விசிலடித்துக்கொண்டே பாடுவது ஆடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்ட சன்னி லியோன் தனது மனம் நெகிழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.