தொடர்ந்து ஹிப் ஹாப்புடன் கை கோர்க்கும் சுந்தர் சி

சுந்தர் சிக்கும் ஹிப் ஹாப் தமிழாவுக்கும் என்ன அப்படி நெருக்கம் என்று தெரியவில்லை. ஒருவேளை சொந்த ஊர் பாசமாக இருக்குமா என தெரியவில்லை. சுந்தர்சி இயக்கிய பல படங்களுக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்தார்.

பாப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த இவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியது சுந்தர் சி, அவர் ஆம்பளை படத்தின் மூலம் இவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

ஆதி இயக்கி இசையமைத்த மீசைய முறுக்கு படத்தை சுந்தர் சி தயாரித்தார் சில நாட்களுக்கு முன் இவர் தயாரித்த மற்றொரு படம் நட்பே துணை திரைப்படம். இதிலும் ஆதிதான் ஹீரோ.

இந்நிலையில் அடுத்ததாக நடிக்கும் படத்தையும் சுந்தர் சியே தயாரிக்கிறார்.