சுலபமாய் சமைக்க – சமையல் குறிப்புகள்


சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் நல்ல உதிரியாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். குழம்பு, பொரியல் செய்யும்போது உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் அல்லது ரஸ்கைப் பொடித்துத் சேர்த்தால் சரியாகிவிடும். ரவா, மைதா உள்ள டப்பாவில் சிறிது வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது. வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும். காய்கறிகளை வேகவைக்கும்போது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்தால் போதுமானது.அதிக அளவு தண்ணீர் சேர்த்தால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை அல்வா மாதிரி நல்ல ருசியாக இருக்கும்.

சமையல் குறிப்புகள் தொடரும்…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews