சுலபமாய் சமைக்க… சமையல் டிப்ஸ்…

தேங்காய்த்துருவல், கடலைப் பருப்பு, மிளகாய், பெருங்காயம் இவற்றைத் தனித்தனியாக சிவக்க வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டால் எல்லா சுண்டலுக்கும் சேர்க்கலாம். சுண்டல் சீக்கிரம் கெட்டுப் போகாது, சுவையும் பிரமாதமாக இருக்கும். குருமா நீர்த்துவிட்டால் அதில் ஒரு கைப்பிடி ஓட்சை போட்டு கொதிக்க விட்டால், குருமா நன்றாகக் கெட்டிப்படுவதோடு சுவையும் கூடும். தர்பூசணி பழத்தோலை தூர எறிந்துவிடாமல், அதில் கூட்டு செய்யலாம். பூசணி கூட்டு மாதிரியே இருக்கும்.

அப்பளத்தின்மீது எண்ணெய் தடவி அதனை தோசைக்கல்லில் போட்டு சுட்டும் சாப்பிடலாம்.தேங்காயைத் துருவி இறுக்கமான டப்பாவில் போட்டு மூடி ஃபீரிஸரில் வைத்தால் தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ளலாம். பத்துநாள்கள் ஆனாலும் புதிதாகவே இருக்கும்.முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி மிளகாய், உப்பு, புளி வைத்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் தயார். பாலைத் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி, வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்போதே அதிகம் புளிக்காத தயிர் விட்டு, ஒரு கரண்டி கொண்டு நன்றாகக் கலக்க வேண்டும். பிறகு அதை மூடி வைத்துவிட்டு மறுநாள் பார்த்தால் கெட்டித் தயிராக உறைந்திருக்கும். புளிக்குழம்பு, காரக்குழம்பு, சாம்பார் வைக்கும்போது தக்காளியை நறுக்கிப் போடாமல் மிக்ஸியில் அரைத்துச் சேர்த்துப் பாருங்கள். ருசியாகவும் குழம்பு கெட்டியாகவும் இருக்கும்.

சமையல் டிப்ஸ் தொடரும்….

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.