சுதா ரகுநாதன் மகள் திருமணம் ஆப்பிரிக்கருடன்நடைபெற்றது

பிரபல கர்நாடக சங்கீத பின்னணி பாடகி சுதா ரகுநாதன் இவர்களின் மகள் மாளவிகாவுக்கும் ஆப்ரிக்க கறுப்பினத்தவரான மைக்கல் மர்பி என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. முதலில் இதை சுதா ரகுநாதன் குடும்பத்தினர் ஏற்கவில்லை என்ற பேச்சு இருந்தது. இருப்பினும் மகளின் விருப்பத்திற்காக சுதா ரகுநாதனும் அவரது கணவரும் சம்மதித்தனர்.

இருப்பினும் ஹிந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த இவர் இதுபோல் கிறிஸ்தவரை ஏற்றுக்கொள்ள கூடாது என்றும் ஹிந்து அமைப்புகள் வாதிட்டனர்.

எல்லாவற்றையும் மீறி இவர்களின் திருமணம் ஹிந்து வைதீக முறைப்படி இன்று நடைபெற்றது.