சுடலை மாடன் பின்னணியில் வெற்றிக்கொடி நாட்டிய திரைப்படம்

நெல்லை மாவட்டத்தின் காவல் தெய்வமாக இம்மாவட்ட மக்கள் வணங்குவது சுடலை மாடன் சாமி. இந்த சாமி நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாது, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களும் இந்த சுடலைமாடனை வணங்கி வருடத்துக்கு ஒரு முறை மிகப்பெரும் விழா எடுத்து மகிழ்வர்.

01f9875977bb26a43669f70b747f6d1f

சுடலைமாடன் சாமி ஆணவக்காரர்களை ,அநியாயக்காரர்களை அழிக்கும் ஒரு தெய்வமாக பார்க்கப்படுகிறது.

சுடலைமாடன் சாமி திருவிழாவின் போது சுடலை மாடன் ஊரை வலம் வருவார். அப்போது எதிரில் யாரும் நிற்க கூடாது என்ற பயம் கலந்த வழிபாடுகள் இன்றும் இருக்கிறது.

இப்படி ஒரு பேக் டிராப்ல அதுவும் நெல்லை மாவட்ட மக்களின் பண்பாடு பழக்க வழக்கத்தில் கிராமத்து திருவிழாக்கள் அதன் பின்னணியில் பெண்மையை போற்றும் ஒரு உயர்ந்த கதையை சொல்லி இருந்தார் இயக்குனர் கணேஷ்ராஜ்.

சில வருடங்களுக்கு முன் இவர் மறைந்துவிட்டார். இருப்பினும் இவர் இயக்கிய சின்னத்தாயி திரைப்படம் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நின்று பேசும்.

இளையராஜாவின் தாயார் பெயரையே இவர் படத்திற்கு வைத்து நெகிழ்ச்சியூட்டி இருந்தார். இசைஞானி இளையராஜாவும் இந்த படங்களில் பாட்டிலும் இசையிலும் பட்டைய கிளப்பினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஓப்பனிங் டைட்டிலே மனதை துள்ளி எழ செய்யும் அதிரடி இசையுடனே ஆரம்பமாகும். சுடலை மாடன் சாமின்னா யாரு என்று டைட்டில் மியூசிக்கே உணர்த்தி விடும்.அவ்வளவு ஒரு உணர்வுப்பூர்வமான கிராமத்து இசையை இசைஞானி இளையராஜாவைத்தவிர வேறு யாரால் கொண்டு வர முடியும்.

பாடல்கள் இப்படத்தில் அதிகம் முதல் பாடலான ஆறுமுக மங்களத்தில் பாடலில் ஆரம்பித்து எங்க ஊரு கோவிலுக்கு பண்டிகைக்கு வந்து விட்டு தங்கி விட்டு செல்ல வேணும் என்ற பாடலாகட்டும், அரும்பரும்பா சரம் தொடுத்த அழகுமணி மாலை இது, முக்கிய பாடலாக நான் ஏரிக்கரை மேலிருந்து, கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி போன்ற அனைத்து பாடல்களுமே அன்றைய சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள் ஆகும்.

கதையும் வலிமை, பாடல்களும் வலிமை, பின்னணி இசையும் வலிமை, இயக்குனர் கதை சொன்ன எடுத்துக்கொண்ட சுடலைமாட சாமி கதைக்களமும் அருமையாக இருந்தது இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

சுடலைமாட சாமியை மனதார மக்கள் வணங்கினாலும் அந்த சாமியின் பெயரை சொல்லி தவறாக நடக்கும் ஊர் பெரிய மனிதர்கள் செய்யும் சேட்டைகளையும் அநியாயமான ஊர் கட்டுப்பாடுகளையும்

இப்படத்தில் சில நிமிடமே வரும் ராதாரவியின் போலீஸ் கதாபாத்திரம் மூலம் படத்தில் வைக்கப்பட்டது.

இப்படி ஒரு படத்தை இனி எவ்வளவு கொடுத்தாலும் இவ்வளவு வலிமையோடு உருவாக்க முடியாது என்பது மட்டும் நிஜம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.