கமலுக்கு ஆதரவாக களத்தில் குதித்த சிறுவன் -வீடியோ

கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் ஹிந்து என்று பேசினார். இதற்கு பல வகையிலும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இதனால் ஒரு நாள் முழுவதும் எந்த ஒரு நிகழ்விலும் கமல் கலந்து கொள்ளவில்லை. நேற்று நடந்த திருப்பரங்குன்றம் கூட்டத்துக்கு முன்பு இந்து இயக்கத்தினர் ரகளை செய்தனர் செருப்பு வீசினர்.

இப்படி களேபரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் சிறுவன் ஒருவன் கமலுக்கு ஆதரவாக பேசியுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.

கமல் சார் 17 வருடங்களுக்கு முன்பு ஹே ராமிலேயே எல்லாத்தையும் சொல்லிட்டார். உங்க பின்னாடி நாங்க இருக்கோம் நல்லவங்க பின்னால நல்லவங்க இருப்பாங்க என பேசி முடித்துள்ளார்.

அச்சிறுவன் யார் என தெரியவில்லை.

இவ்வீடியோ வைரலாகி உள்ளது.