Connect with us

ஸ்டீவன் ஸ்மித்தை வீழ்த்தணும்… பாகிஸ்தான் பயிற்சியாளர் பிளான்!!

விளையாட்டு

ஸ்டீவன் ஸ்மித்தை வீழ்த்தணும்… பாகிஸ்தான் பயிற்சியாளர் பிளான்!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது.

20 ஓவர் தொடரில் 0-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

அடுத்து ஒருநாள் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது.

இந்த ஆட்டத்தின் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை துவங்குகிறது.

மிகவும் வலுவான அணியாக திகழ்ந்துவரும் ஆஸ்திரேலியா அணியானது, பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என பாகிஸ்தான் அணிக்கு அனைத்து வகையிலும் நெருக்கடி கொடுக்கிறது.

ஸ்டீவன் சுமித் ஆஸ்திரேலிய அணிக்கு கோலாக இருப்பார். ஸ்டீவன் ஸ்மித்தை வீழ்த்திவிட்டா போதும் என்று களமிறங்குவர் பாகிஸ்தான் வீரர்கள்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் கூறியதாவது, “ஸ்டீவன் ஸ்மித் மிகவும் வலுவான வீரர். ஆஸ்திரேலிய அணியின் தூண் போன்றவர்.

 அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால், எளிதில் ரன் ரேட்டை நெருங்கிவிடலாம்.

வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த முறை நிச்சயம் ஸ்டீவன் ஸ்மித்திற்கு நெருக்கடி கொடுத்து வீழ்த்துவார்கள்” என்று கூறினார்.

Continue Reading
To Top