ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் மருத்துவ அதிகாரி வேலை

மத்திய அரசில்  ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (SAIL)  காலியாக உள்ள மருத்துவ அதிகாரி (Medical Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் மருத்துவ அதிகாரி வேலை

காலிப்  பணியிடங்கள் :

மருத்துவ அதிகாரி (Medical Officer) பிரிவில் 129 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery) பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 20,600 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 700 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.sail.co.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.sailcareers.com/media/uploads/RDS_Short_Notic_Eng_25X55cms.pdf என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-06-2019