ஸ்டாலினை சந்தித்த விவேக்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் தற்போதைய தலைவருமான ஸ்டாலினை விவேக் சந்தித்து பேசினார். திமுக தலைவர் கருணாநிதியின் எழுத்தில் மிகுந்த மரியாதை கொண்டவர் விவேக். தனது படங்களில் கூட கருணாநிதியின் எழுத்தை சுட்டி காட்டுவார்.

அவரது பராசக்தி பட வசனத்தை மாற்றி பேசியிருப்பார். இப்போது ஸ்டாலினை சந்தித்து இருப்பது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிகிறது.