Connect with us

தமிழக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா? ஸ்டாலின் திட்டம் கைகொடுக்குமா?

செய்திகள்

தமிழக எம்பிக்கள் கூண்டோடு ராஜினாமா? ஸ்டாலின் திட்டம் கைகொடுக்குமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு அதனை அமைக்க சுணக்கம் காட்டி வருகிறது. கர்நாடகாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அங்கு இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைய நேரிடும் என்ற அரசியல் காரணத்திற்காக மத்திய அரசு இதில் ஆர்வம் காட்டாமல் உள்ளது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்றுசந்தித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை கூறியுள்ளார்.

ஆனால் 37 எம்பிக்களை கைவசம் வைத்துள்ள அதிமுக இதற்கு சம்மதிக்குமா? என தெரியவில்லை. திமுகவுக்கு லோக்சபாவில் ஒரு எம்பிகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக எம்பி பொன்.ராதாகிருஷ்ணன், ராஜினாமா செய்யமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதைவிட ஒட்டுமொத்தமாக பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து காரியத்தை சாதிக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top