Connect with us

டாக்டர்களை பாராட்டிய ஸ்டாலின்

செய்திகள்

டாக்டர்களை பாராட்டிய ஸ்டாலின்

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுமைக்கும் இருந்து வரும் இவ்வேளையில் மருத்துவர்களின் பணி பாராட்டத்தக்கதாகும். மருத்துவர்கள் மட்டுமல்லாது,செவிலியர்கள், துப்புரவாளர்கள் என அனைவரின் பணியுமே பாராட்டுக்குரியதாகும்.

அனைவரும் மருத்துவர்களை பாராட்டி வரும் இவ்வேளையில் திமுக தலைவர் ஸ்டாலினும் தன் பங்குக்கு டாக்டர்களை பாராட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனாவிற்கு எதிராக தடுப்புப் பணிகளை மேற்கொள்ள களத்தில் உள்ள வசதிகள் பற்றி மருத்துவ நிபுணர் குழுவினருடன் தொலைபேசி வாயிலாக கலந்தாலோசித்தேன். அவர்களின் சேவைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top