சினிமாவில் அரசியலை அதிகம் இழுத்த நடிகர்களில் இவரும் ஒருவர்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய நகைச்சுவை நடிகர்களில் எஸ்.எஸ் சந்திரனும் ஒருவர். இவர் தமிழ்நாட்டில் சிவகங்கையை பூர்விகமாக கொண்டவர்.

54ef0abd3e30ca6aa54bc36eb5d63980-1

வித்தியாசமான வேடங்களை பல படங்களில் ஏற்றிருப்பார். கவுண்டமணி, செந்தில் காமெடிகள் அந்த நாளில் ஒரு பக்கம் புகழ்பெற்றிருந்தாலும் இவரின் காமெடியும் தூக்கலாக இருக்கும்.

தூக்கலாக இருப்பதற்கு காரணம் காமெடியில் அரசியல் நையாண்டியை கோர்த்து விடுவார்.

இவர் ஆரம்பகாலத்தில் திமுகவின் கலைஞரின் தீவிர விசுவாசி. அதனால் எதிர்க்கட்சியை குறித்தே தனது படங்களில் அரசியல் நையாண்டிகளை தன் படத்தில் அதிகம் வைப்பார்.

எல்லா கட்சித்தலைவரையும் கலாய்த்து தள்ளுவார். முக்கியமாக திமுகவின் எதிர்க்கட்சியான அதிமுகவை அந்த நாட்களில் அதிகம் கலாய்த்து காமெடி செய்வார்.

பின்னாட்களில் இவர் திமுகவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்து முக்கிய பொறுப்பில் இருந்தார். அந்த நாட்களில் இவருக்கு சினிமா வாய்ப்பு அதிகம் இல்லையாதலால் திமுகவை படங்களில் நையாண்டி செய்ய முடியாமல் போனது.

இறுதியில் இவர் அதிமுக அரசியல் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே இவரின் உயிர் பிரிந்தது.

இவரின் காமெடியின் தனித்துவம் வேறு மாதிரி இருக்கும். என்னப்பா கை காலெல்லாம் உடைஞ்சிருக்கு என்ன ஆச்சு என்பார் ஒருவர்.

மாடியில் இருந்து விழுந்துட்டேன்பா என்பார் எஸ்.எஸ்

உங்க வீட்லதான் மாடியே இல்லையே என்பார் மற்றொருவர்.

இருக்குன்னு நெனச்சு ஏறி விழுந்துட்டன்யா என இவரின் பதில் வித்யாசமாக இருக்கும். சாதாரண காமெடிதான் அதை இவர் நகைச்சுவையாக வெளிப்படுத்துவது அருமையாக இருக்கும்.

ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளையில் இவரும் வினுச்சக்கரவர்த்தியும் சேர்ந்து நகைச்சுவையில் கலக்கி இருப்பார்கள்.

தமிழ் சினிமாவின் சிறந்த ஒரு நகைச்சுவை கலைஞராக எஸ்.எஸ் சந்திரன் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews